செய்திகள்
கிரிக்கெட் விளையாடும் ஊழியர்கள்

விசாகப்பட்டினம் பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்- வீடியோ

Published On 2020-03-26 03:54 GMT   |   Update On 2020-03-26 03:54 GMT
ஊரடங்கு உத்தரவால் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் விசாகப்பட்டினத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழிக்கின்றனர்.
விசாகப்பட்டினம்:

சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்தலை பின்பற்றுவதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை பெருமளவிற்கு கட்டுப்படுத்த முடியும். எனவே, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை கண்டிப்பாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவால் ஒருசிலர் தவிர பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

வீடுகளில் முடங்கி உள்ள மக்கள் புத்தகங்கள் வாசிப்பு, நாளிதழ்கள் படித்தல், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை அறிந்துகொள்ளுதல்... என பொழுதை கழிக்கின்றனர். 


இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த காவல்துறையினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தீவிர களப் பணியாற்றி வருகின்றனர். மேலும் மக்களுக்கு சமூக விலகல் தொடர்பாக விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றனர். 
Tags:    

Similar News