செய்திகள்
பிரதமர் மோடி

வாரணாசி மக்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடல்

Published On 2020-03-25 12:59 GMT   |   Update On 2020-03-25 12:59 GMT
பிரதமர் மோடி தனது தொகுதியான உத்தர பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி மக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று கலந்துரையாடினார்.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியாகும். வாரணாசி மக்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று மாலை கலந்துரையாடினார். அப்போது மக்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கொரோனாவை வெல்ல வேண்டும் எனக்கூறிய பிரதமர் மோடி, மருத்துவமனைகளில் மக்களுக்காக பாடுபடும் மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் குறித்த வீண் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், கொரோனாவுக்கு ஏழை, பணக்காரன் என தெரியாது. அனைவரும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யவும். மகாபாரதப் போர் 18 நாட்கள் நடந்தது, 21 நாட்கள் நடக்கும் இப்போரில் வெல்வதே நம் நோக்கம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News