செய்திகள்
குற்றசாளி வினய் சர்மா

நிர்பயா கொலை குற்றவாளி டெல்லி ஐகோர்ட்டில் மனு

Published On 2020-03-14 01:59 GMT   |   Update On 2020-03-14 01:59 GMT
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி :

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முகே‌‌ஷ் குமார், வினய் சர்மா, அக்‌‌ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோரை வருகிற 20-ந்தேதி அதிகாலை தூக்கில்போட கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தண்டனையில் இருந்து தப்பிக்க சட்ட ரீதியாக இதுவரை அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தார். வினய் சர்மா சார்பில் அவரது வக்கீல் ஏ.பி.சிங் தாக்கல் செய்த அந்த மனுவில், வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது முறையாக இல்லை என்றும், கருணை மனுவை நிராகரிக்குமாறு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட சிபாரிசு கடிதத்தில் டெல்லி உள்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயினின் கையெழுத்து இல்லை என்றும், எனவே வினய் சர்மாவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News