செய்திகள்
பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - பினராயி விஜயன்

Published On 2020-03-12 14:40 GMT   |   Update On 2020-03-12 14:40 GMT
கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

இந்தியாவில் முதலில் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. அவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். அதன்பின்னர், சில நாட்களுக்கு முன்பு, இத்தாலியில் இருந்து திரும்பிய பத்தனம் திட்டாவை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. அவர்களது உறவினர்கள் 2 பேருக்கும் நோய் தொற்றியது. பின்னர்,  சில தினங்களுக்கு முன் 3 வயது ஆண் குழந்தைக்கு நோய் உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் மேலும்  6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக கேரள மந்திரிசபை கூட்டத்துக்கு பிறகு, முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். இந்த 6 பேரும், இத்தாலிக்கு சென்று விட்டு திரும்பிய குடும்பத்துடன் நெருங்கிய பழக்கம் கொண்டவர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து, கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின்  எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ள நிலையில்,  கேரளாவில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருச்சூர் மற்றும் கண்ணூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News