செய்திகள்
சையத் அல்தாப் புகாரி

புதிய கட்சி தொடங்கினார் காஷ்மீர் முன்னாள் மந்திரி அல்தாப் புகாரி

Published On 2020-03-08 10:20 GMT   |   Update On 2020-03-08 12:07 GMT
காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் காஷ்மீர் முன்னாள் மந்திரி அல்தாப் புகாரி ஜம்மு-காஷ்மீர் அப்னி பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை இன்று தொடங்கினார்.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் முன்னர் சிறப்பு அந்தஸ்துடன் கூடிய தனி மாநிலமாக இருந்தபோது முதல் மந்திரி மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் சையத் அல்தாப் புகாரி.

அக்கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய அல்தாப் புகாரி, ஜம்மு-காஷ்மீர் அப்னி பார்ட்டி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை இன்று தொடங்கினார்.



ஸ்ரீநகரில் உள்ள அல்தாப் புகாரியின் இல்லத்தில் இன்று நடைபெற்ற புதிய கட்சியின் துவக்க விழாவில் மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்களை ஜம்மு-காஷ்மீர் அப்னி பார்ட்டியில் இணைத்து கொண்டனர்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்டுவது, இங்கு வாழும் மக்களின் வாழ்வுரிமை, நில உரிமை மற்றும் வேலைவாய்ப்புக்கான உரிமைகளை நிலைநாட்டுவதே சாமானிய மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள எங்கள் புதிய கட்சியின் நோக்கமாகும் என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அல்தாப் புகாரி குறிப்பிட்டார்.

Tags:    

Similar News