செய்திகள்
சித்தரிப்பு படம்

நாய்களுக்கு திருட்டு மின்சாரம் மூலம் 24 மணிநேரமும் ஏ.சி.வசதி: ரூ.7 லட்சம் அபராதம் கட்டிய நபர்

Published On 2020-03-07 12:44 GMT   |   Update On 2020-03-07 12:44 GMT
மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் செல்லமாக வளர்க்கும் நாய்களுக்காக திருட்டு மின்சாரம் மூலம் 24 மணிநேரமும் ஏ.சி.வசதி செய்தவருக்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலவகையான விலையுயர்ந்த நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்.

இவை வெயிலின் வெம்மையில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, தனது வீட்டின் மின் அளவீட்டுக் கருவியின் கண்ணை மறைத்து, தனியாக ஒரு ஒயரின் மூலம் திருட்டுத்தனமாக மின்சாரத்தை கடத்தி நாய்கள் இருக்கும் அறைக்குள் 24 மணி நேரமும் குளிர்சாதன இயந்திரங்கள் இயங்குமாறு வசதிப்படுத்திக் கொடுத்திருந்தார்.

இதை நோட்டமிட்ட சிலர் மின்சார வாரியத்தை சேர்ந்த உள்ளூர் அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் அளித்தனர். அவர்கள் வந்து அந்நபரின் வீட்டை சோதனையிட்டபோது நாய்கள் சொகுசாக வாழ்வதற்காக அவர் 34 ஆயிரத்து 465 யூனிட் மின்சாரத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த திருட்டுக்காக அந்நபரிடம் இருந்து மின்சார கட்டணம் மற்றும் அபராதமாக 7 லட்சம் ரூபாய் பெறப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News