செய்திகள்
கோப்பு படம்

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி- ஜனாதிபதி மாளிகையில் ஹோலி கொண்டாட்டம் ரத்து

Published On 2020-03-04 13:17 GMT   |   Update On 2020-03-04 14:47 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஜனாதிபதி மாளிகையில் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.
புதுடெல்லி:

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 60க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த நோய் மெல்ல மெல்ல இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. மக்கள் கூட்டமாக இருக்கும் பகுதியில் இந்நோய் வேகமாக பரவுகிறது.

இதற்கிடையே, வர இருக்கின்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஜனாதிபதி மாளிகையில் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஜனாதிபதி மாளிகையில் ஹோலி கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. விழிப்புணர்வு, பாதுகாப்புடன் நாம் ஒன்றிணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News