செய்திகள்
பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்த டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்

டெல்லியின் மவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு

Published On 2020-02-28 10:22 GMT   |   Update On 2020-02-28 10:22 GMT
வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மவுஜ்பூரில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
புதுடெல்லி:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது.

வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் தலைமை காவலர், உளவுத்துறை அதிகாரி உள்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, டெல்லி கலவரத்தால் பாதிக்கப்பட்ட சீலம்பூர், ஜாப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரி சவுக் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆய்வுசெய்தார். மேலும், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோரும்  நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மவுஜ்பூரில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் சென்று ஆய்வு நடத்தி, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Tags:    

Similar News