செய்திகள்
கைது செய்யப்பட்ட அக்தர் கசமாலி மெர்ச்செண்ட்

மகாராஷ்டிரா: பயங்கரவாதி தாவூத் இப்ராகிமின் கூட்டாளி கைது

Published On 2020-02-26 23:40 GMT   |   Update On 2020-02-26 23:40 GMT
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி தாவூத் இப்ராகிமின் கூட்டாளியை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
மும்பை:

மும்பை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி தாவூத் இப்ராகிமை கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது.

ஆனால், பாகிஸ்தான் அரசு தாவூத் இப்ராகிமை மறைமுகமாக அடைக்கலம் கொடுத்து வருவதால் அவனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதி தாவூத்தின் கூட்டாளிகள் சிலர் இந்தியா மட்டுமல்லாமல் அண்டைநாடுகளிலும் பதுங்கியுள்ளனர்.

இதற்கிடையில், தாவூத்தின் கூட்டாளியாக செயல்பட்டு வந்தவன் அக்தர் கசமாலி மெர்ச்செண்ட் (56). இவன் மீது கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக மும்பை நயா நகர் போலீஸ் நிலையத்தில் 2018-ம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

இதைதொடர்ந்து, அக்தரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவன் நேபாளம், வங்காளதேசம் என அண்டைநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்துவந்தான்.

இந்நிலையில், அக்தர் கசமாலி மெர்ச்செண்ட் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு வந்திருப்பதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மும்பையின் பல்கர் மாவட்டம் நலசோப்ரா பகுதியில் பயங்கரவாத தடுப்பு படையினர் இன்று அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையின் போது விசிக் சென்டர் சவுக் என்ற பகுதியில் பதுங்கியிருந்த அக்தர் கசமாலி மெர்ச்செண்ட் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.   
Tags:    

Similar News