செய்திகள்
கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் தோட்டாக்கள்

கேரள வனப்பகுதியில் பாகிஸ்தான் தோட்டாக்கள்- முக்கிய தடயங்கள் சிக்கின

Published On 2020-02-26 05:39 GMT   |   Update On 2020-02-26 05:39 GMT
கேரள வனப்பகுதியில் பாகிஸ்தான் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் குளத்துப்புழா காட்டுப்பகுதியில் 30 அடி பாலம் அருகே புதரில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தோட்டாக்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவையாகும். கேரள வனப்பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ராணுவ உளவுத்துறை, மத்திய உளவுத்துறை அமைப்புகளான என்.ஐ.ஏ., ரா மற்றும் ஐ.பி. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

குளத்துப்புழா மற்றும் தென்மலை உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியோடு இணைந்து உள்ளதால் வனப்பகுதியிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது வெளி மாநில தொழிலாளர்கள் சிலர் அந்த பகுதியில் சமீபத்தில் தங்கி வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அவர்களில் சிலரை பிடித்து உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவனந்தபுரம் - குளத்துப்புழா-புனலூர் சாலையில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை உளவுப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

அந்த கேமராவில் பதிவான காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அதில் சில தடயங்கள் சிக்கி உள்ளது. இந்த தடயங்கள் மூலமும் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News