செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

டெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் - அதிபர் டிரம்ப்

Published On 2020-02-25 13:05 GMT   |   Update On 2020-02-25 13:05 GMT
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், டெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் என குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தலைநகர் டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பாகிஸ்தானில் இருந்து வரும் பிரச்சினைகளை இந்தியா சமாளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய நான் தயார்.

உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. உலகில் பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர்.

டெல்லியில் வன்முறை ஏற்பட்டதாக கேள்விப்பட்டேன். ஆனால் அதுபற்றி பிரதமர் மோடியிடம் பேசவில்லை. டெல்லியில் ஏற்பட்ட வன்முறை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை. எந்த ஒரு பிரச்சினைக்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி இருக்கிறார்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார்.

2 நாள் இந்தியப்பயணம் அருமையாக இருந்தது; எனக்கும் பிரதமர் மோடிக்கும் நெருங்கிய நட்பு உள்ளது. இந்தியாவுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News