செய்திகள்
மோடி, டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ வரவேற்க இந்தியா ஆவலுடன் இருக்கிறது: மோடி டுவிட்

Published On 2020-02-23 10:15 GMT   |   Update On 2020-02-23 10:15 GMT
இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வர இருக்கும் டொனால்டு டிரம்ப்-ஐ வரவேற்கும் விதமாக மோடி டுவிட்டர் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவருடன் மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஷ்னெர் மற்றும் முக்கிய அதிகாரிகள் வருகை தருகிறார்கள்.

டிரம்பை வரவேற்பதற்காக அகமதாபாத் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. டிரம்பும், மோடியும் அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக ஊர்வலமாக செல்கின்றனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரணி முடிந்தவுடன் சபர்மதி ஆசிரமத்துக்கு டிரம்ப் செல்கிறார்.  அதன்பின் மொடேரா கிரிக்கெட் மைதானம் செல்லும் டிரம்ப் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இந்நிலையில்  டிரம்ப்-ஐ வரவேற்கும் விதமாக இந்திய பிரதமர் மோடி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ‘‘அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ வரவேற்க இந்தியா எதிர்நோக்கி இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, அவர் எங்களுடன் இருப்பது கௌரவம்’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News