செய்திகள்
டிக் டாக்

மேற்கு வங்காளத்தில் 10-ம் வகுப்பு வினாத்தாளை டிக்-டாக்கில் வெளியிட்ட மாணவன் கைது

Published On 2020-02-20 05:05 GMT   |   Update On 2020-02-20 05:05 GMT
மேற்கு வங்காளத்தில் 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஆங்கில தேர்வு வினாத்தாளை டிக்-டாக்கில் வெளியிட்ட மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று ஆங்கில பரீட்சை நடந்தது.

பரீட்சை நடந்து கொண்டிருந்தபோதே அதன் வினாத்தாள் வெளிவந்தது. அது உடனடியாக பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவியது.

இதுசம்பந்தமாக கல்வித்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் அங்குள்ள மால்டா மாவட்டத்தில் பைத்தியநாத்பூர் உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய ஒரு மாணவன் டிக்டாக்கில் வெளியிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


போலீசார் அவனை கைது செய்தார்கள். அவனுக்கு 16 வயது தான் ஆகிறது. எனவே சிறுவர்களுக்கான கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். மேலும் சிறுவன் என்பதால் அவனுடைய பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பரீட்சை ஹாலுக்குள் அவன் எப்படி செல்போன் எடுத்து சென்றான் என்று தெரியவில்லை. அதை மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க தவறியது எப்படி என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News