செய்திகள்
சிறுத்தை

கடந்த 200 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 90 சதவீதம் சரிவு

Published On 2020-02-09 00:17 GMT   |   Update On 2020-02-09 00:17 GMT
கடந்த 120 முதல் 200 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 75 முதல் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக மரபணுசார் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி:

பெங்களூருவில் செயல்படும் வன உயிரின கல்வி மையம் (சி.டபிள்யூ.எஸ்.) மற்றும் டேராடூனில் உள்ள இந்திய வனஉயிரின கல்வி நிறுவனம் (டபிள்யூ.ஐ.ஐ.) ஆகியவை சார்பில் நாட்டில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிறுத்தைகள் அதிகம் வாழும் பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமியின் பாதி வறண்ட பகுதி, சிவாலிக் மலைகள் மற்றும் வட இந்தியாவின் தெராய், இமயமலை, கங்கை சமவெளி ஆகிய இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டது.

இதற்காக நாடு முழுவதும் இருந்து சேகரிக்கப்பட்ட மரபணு சார் தரவுகளை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். மேலும், சிறுத்தைகளின் கழிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டும், மரபணு தொழில்நுட்பங்கள் மூலமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் கடந்த 120 முதல் 200 ஆண்டுகளில் இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 75 முதல் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக மரபணுசார் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. இது கவலைக்குரியது எனவும், எனவே, புலிகளைப் போல சிறுத்தைகளையும் பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News