செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியை கைப்பற்றுகிறதா ஆம் ஆத்மி? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?

Published On 2020-02-08 13:53 GMT   |   Update On 2020-02-08 13:53 GMT
தலைநகர் டெல்லியை ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிடிக்கும் என பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி: 

70 தொகுதிகளை கொண்ட தலைநகர் டெல்லிக்கான சட்டசபைத்தேர்தல் எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் சுமூகமாக நிறைவடைந்தது. 5 மணி நிலவரப்படி 54 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கை வைத்துள்ளன.

இந்நிலையில், இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து பல்வேறு ஆங்கில ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தற்போது வெளியிட்டுவருகின்றனர்.

ஆங்கில ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள் பின்வருமாறு:


      
டைம்ஸ் நவ்:-

ஆம் ஆத்மி - 44

பாஜக - 26

காங்கிரஸ் - 0


ரிபப்ளிக் டிவி:

ஆம் ஆத்மி - 48-61 

பாஜக - 9-21

காங்கிரஸ் - 0-1


நியூஸ் எக்ஸ்:

ஆம் ஆத்மி - 50-56

பாஜக - 10-14

காங்கிரஸ் - 0


த குவிண்ட்:

ஆம் ஆத்மி - 49-63

பாஜக - 5-19

காங்கிரஸ் - 0-4

பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பின் முடிவில் அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News