செய்திகள்
தேர்தலில் வாக்களித்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

டெல்லி சட்டசபை தேர்தல் - மாலை நிலவரப்படி 42.70 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2020-02-08 11:23 GMT   |   Update On 2020-02-08 11:23 GMT
தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் மாலை நிலவரப்படி 42.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
புதுடெல்லி:

70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.  மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து  ஜனநாயக கடமையாற்றினார். டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

இதேபோல், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு தொகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா, அவர்களின் மகன் ரைஹான் ராஜீவ் வதேரா ஆகியோர் வாக்களித்தனர். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் தங்களது வாக்குகளை அளித்தனர்.

டெல்லியில் காலை 10 மணிக்கு 4.33 சதவீதம், காலை 11 மணிக்கு 6.96 சதவீதம், 12 மணிக்கு 15.68 சதவீதம், மதியம் 1 மணிக்கு 19.37 சதவீதம், மதியம் 2 மணிக்கு 28.14 சதவீதம், மதியம் 3 மணிக்கு 30.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி 42.70 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News