செய்திகள்
அமித்ஷா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால்

ஷாகீன் பாக் போராட்டத்தை அமித்ஷா முடிவுக்கு கொண்டு வராததற்கு தேர்தலே காரணம் - கெஜ்ரிவால்

Published On 2020-02-06 11:08 GMT   |   Update On 2020-02-06 11:42 GMT
டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தை உள்துறை மந்திரி அமித்ஷா முடிவுக்கு கொண்டுவராததற்கு சட்டசபைத்தேர்தலே காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வரும் 8-ம் தேதி டெல்லி சட்டசபைத்தேர்தல் நடைபெற உள்ளது. பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்துடன் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 
  
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளரிடம் இன்று அளித்த பேட்டியில்,  'சிறந்த கல்வி, மருத்துவ சேவைகள், நவீன சாலைகள், 24 மணி நேரமும் மின்சார வசதி ஆகியவை கிடைக்க விரும்புபவர்களே ஆம் ஆத்மி கட்சி வாக்காளர்கள். 



டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச திட்டங்கள் தொடரும். மேலும், புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

ஷகீன் பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உள்துறை மந்திரி அமித்ஷாவை தடுப்பது என்ன? அப்பகுதியில் உள்ள சாலைகளை தடை செய்து வைத்திருப்பதால் அமித்ஷா அவர்களுக்கு ஏற்படும் நன்மை என்ன? 

போராட்டத்தில் அரசியலை புகுத்தி டெல்லி மக்களை ஏன் அவர்கள் (பாஜக) தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்கள்? டெல்லி தேர்தலில் பாஜகவின் முதல் மந்திரி வேட்பாளர் யார்? என மக்கள் தெரிய விரும்புகிறார்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News