செய்திகள்
வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை

Published On 2020-02-04 10:48 GMT   |   Update On 2020-02-04 10:48 GMT
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

நேற்றைய நிலவரப்படி 361 ஆக இருந்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரே நாளில் 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நேற்றைய நிலவரப்படி 17,205 பேருக்கு பரவியிருந்த இந்த வைரஸ் தற்போதைய நிலவரப்படி 20,438 பேருக்கு பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஹாங்காங்கிலும், பிலிப்பைன்சிலும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.



உலகின் 25 நாடுகளுக்கும் அதிகமாக பரவியுள்ள இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. சீனாவில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய மூன்று நபர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீன நாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தேவைப்படும் விசா ரத்து செய்யப்பட்டு அவர்கள் இந்தியா வர தடை விதித்துள்ளது. மேலும், கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு சென்ற பிற நாட்டை சேர்ந்தவர்களும் இந்தியாவுக்கு வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.  
Tags:    

Similar News