செய்திகள்
நிர்மலா சீதாராமன் அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தினர்

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை பார்த்த குடும்பத்தினர்

Published On 2020-02-01 20:05 GMT   |   Update On 2020-02-01 20:05 GMT
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை பார்வையாளர் மாடத்தில் இருந்து அவரது மகள் வங்மயி பர்கலா உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேர் பார்த்தனர்.
புதுடெல்லி:

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்தவுடன், பிரதமர் நரேந்திரமோடி தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவரை பாராட்டினார். அவரை தொடர்ந்து பியூஸ்கோயல், ஸ்மிரிதிஇரானி உள்ளிட்ட சக மத்திய மந்திரிகளும், பல எம்.பி.க்களும் அவரை வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை பார்வையாளர் மாடத்தில் இருந்து அவரது மகள் வங்மயி பர்கலா உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேர் பார்த்தனர். பட்ஜெட் உரையை முடித்த நிர்மலா சீதாராமன், தனது மகள், உறவினர்களை பார்த்து மகிழ்ச்சியாக கையசைத்தபடி சென்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, சமாஜ்வாடி கட்சி முன்னாள் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோர் நேற்று பாராளுமன்றத்துக்கு வரவில்லை. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பலரும் பாராளுமன்றம் வந்திருந்தனர்.

Tags:    

Similar News