செய்திகள்
பாஜக எம்.எல்.ஏ. பீகாரி லால்

சட்டமன்றத்திற்கு கூடை நிறைய வெட்டுக்கிளிகளை கொண்டுவந்த எம்.எல்.ஏ.வால் பரபரப்பு

Published On 2020-01-24 15:21 GMT   |   Update On 2020-01-24 15:21 GMT
ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திற்குள் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூடை நிறைய வெட்டுக்கிளிகளை கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்கள் வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளன. 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயிரிகளை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளதால் சுமார் 3.70 லட்சம் ஹெக்டெர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகளில் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர். 

இதற்கிடையில், வெட்டுக்கிளிகள் தாக்குதலால் நஷ்டத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கு காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் அரசு நிவாரண தொகை அறிவித்துள்ளது.



இந்நிலையில், காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கும் பணியை துரிதப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் விநோதமான போராட்டத்தில் ஈடுபட்டார். 

பீகாரி லால் என்ற அந்த பாஜக எம்.எல்.ஏ. ஒரு கூடை நிறைய வெட்டுக்கிளிகளை பிடித்துக்கொண்டு ராஜஸ்தான் சட்டமன்ற வளாகத்திற்கு வந்தார். 

வெட்டுக்கிளிகளால் பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணத்தொகை வழங்க ராஜஸ்தான் அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டத்தை நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News