செய்திகள்
‘பால புரஸ்கார்’ விருதை பெற்ற லால்கன்சங்

புதுச்சேரி சிறுவன் உள்பட 49 பேருக்கு ‘பால புரஸ்கார்’ விருது- ஜனாதிபதி வழங்கினார்

Published On 2020-01-23 02:45 GMT   |   Update On 2020-01-23 02:45 GMT
புதுச்சேரியை சேர்ந்த சிறுவன் உள்பட 49 பேருக்கு பாலபுரஸ்கார் விருதுகளை ஜனாதிபதி வழங்கினார். இவ்விருது, ஒரு பதக்கம், ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ், பாராட்டு பத்திரம் ஆகியவை அடங்கியது ஆகும்.
புதுடெல்லி:

சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை, கலாசாரம் ஆகியவற்றில் புதுமைகள் படைத்த 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், வீர தீர செயல் புரியும் சிறுவர்களுக்கும் ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்’ விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு இவ்விருதுக்கு 49 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். இவ்விருது, ஒரு பதக்கம், ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ், பாராட்டு பத்திரம் ஆகியவை அடங்கியது ஆகும்.

ரஷிய பெண் பயணியை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்றிய 15 வயதான இஷான் சர்மா, மணிப்பூரில் ஒரு குட்டையில் விழுந்த 3 சிறுமிகளை காப்பாற்றிய லால்கன்சங் இளம்வயது பியானோ கலைஞர் கவுரி மிஸ்ரா, 50 மேஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி உள்ள 12 வயது டார்ஷ் மலானி ஆகியோர் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். 
Tags:    

Similar News