செய்திகள்
ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்டின் 11வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் நாளை பதவியேற்கிறார்

Published On 2019-12-28 14:00 GMT   |   Update On 2019-12-28 17:12 GMT
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன், அம்மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக நாளை பதவியேற்க உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஞ்சி:

81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அங்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
 
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான  ஹேமந்த் சோரன் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிக அதிகமான வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றார்.

இதற்கிடையே, ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன், மாநில கவர்னர் திரவுபதி முர்முவை சந்தித்து 50 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் அளித்தார், அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஹேமந்த் சோரன், டிசம்பர் 29-ம் தேதி பதவியேற்க உள்ளேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் நாளை பதவியேற்கிறார். அவருக்கு மாநில கவர்னர் திரவுபதி மர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேரு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல் மந்திரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
Tags:    

Similar News