செய்திகள்
ஜார்க்கண்ட் சட்டசபை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக சட்டசபைக்கு 10 பெண் எம்.எல்.ஏ.க்கள் தேர்வு

Published On 2019-12-24 05:42 GMT   |   Update On 2019-12-24 05:42 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் முறையாக 10 பெண் எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி, அமோக வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த்  சோரன் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில், முதல் முறையாக 10 பெண்கள் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து 4 பெண் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக தலா 3 பெண் எம்எல்ஏக்களை பெற்றுள்ளன. இந்த 10 பெண் எம்எல்ஏக்களில் 6 பேர் முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். 

2014ல் 9 பெண்களும், 2009ல் 8 பெண்களும், 2005ல் 5 பெண்களும் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றனர். 

இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 127 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News