செய்திகள்
மத்திய அமைச்சரிடம் இருந்து விருதுகளை பெற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

தமிழகத்துக்கு 12 தேசிய விருதுகள்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மத்திய மந்திரி வழங்கினார்

Published On 2019-12-19 10:40 GMT   |   Update On 2019-12-19 10:40 GMT
டெல்லியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 2019-ம் ஆண்டிற்கான விருதுகளை மத்திய அமைச்சரிடம் இருந்து அமைச்சர் எஸ்பி வேலுமணி பெற்றார்.
புதுடெல்லி:

டெல்லியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 2019-ம் ஆண்டிற்கான விருதுகளை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் நரேந்திரசிங் டோமரிடமிருந்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மத்திய அரசு இன்று மாநில அளவில் 2 தேசிய விருதுகளும், மாவட்ட அளவில் 4 தேசிய விருதுகளும், ஊராட்சி ஒன்றிய அளவில் 1 தேசிய விருதும், கிராம ஊராட்சி அளவில் 1 தேசிய விருதும் ஆக மொத்தம் 8 விருதுகளும்,

மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக தேசிய விருதும், ரூர்பன் திட்டத்தின் கீழ், ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காகவும் (2-வது இடம்) மற்றும் தொகுப்புகளுக்கான இடம் சார்ந்த திட்டமிடலில் (3-வது இடம்) சிறப்பாக செயல்பட்டமைக்காக 2 தேசிய விருதுகளும்,

தீனதயாள் உபாயத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தமைக்காக தமிழகத்திற்கு, தேசிய தங்க விருதும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக மொத்தம் 12 தேசிய விருதுகள் மத்திய அரசு வழங்கியது.

நடப்பாண்டில் (2019-20), ஊரக வளர்ச்சித் துறை ஏற்கனவே 19 தேசிய விருதுகள் பெற்றுள்ளது. இன்று வழங்கப்பட்ட 12 விருதுகளையும் சேர்த்து மொத்தம் 31 தேசிய விருதுகள் பெற்றுள்ளது.

தேசிய அளவில், ஊரக வளர்ச்சி திட்டங்களை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, மத்திய அரசு 2012 முதல் இதுவரையில் 98 தேசிய விருதுகளை தமிழகத்திற்கு வழங்கியது.
Tags:    

Similar News