செய்திகள்
நிர்பயா தாயார்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - நிர்பயா தாயார்

Published On 2019-12-18 10:31 GMT   |   Update On 2019-12-18 10:31 GMT
நிர்பயா கொலை வழக்கு குற்றவாளியின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என நிர்பயாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார்.

மீதமுள்ள 4 பேரில் 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின், 4-வது குற்றவாளியான அக்சய் குமார் சிங், சமீபத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், குற்றவாளி அக்சய் குமார் சிங்கின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நிர்பயா கொலை வழக்கு குற்றவாளி அக்‌சய் குமாரின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு  நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி செய்தியாளர்களிடம் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
Tags:    

Similar News