செய்திகள்
சட்டசபையில் அமளி

மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு நிவாரணம்: பாஜக, சிவசேனா வாக்குவாதத்தால் சட்டசபை ஒத்திவைப்பு

Published On 2019-12-17 09:43 GMT   |   Update On 2019-12-17 14:14 GMT
ஆட்சியில் இல்லாதபோது சிவசேனா கூறியவாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அளிக்க வலியுறுத்தி ஏற்பட்ட அமளியால் மகாராஷ்டிரா சட்டசபை ஒத்திவைக்கப்படது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் அளவுக்கதிகமாக பெய்த மழையால் பல லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விதைக்கப்பட்டிருந்த பல்லாயிரம் கோடி ரூபாய் பயிர்கள் அழிந்தன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு
ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும் என முன்னர் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா வலியுறுத்தி இருந்தது.

தற்போது அம்மாநிலத்தின் ஆளும்கட்சியாக சிவசேனா மாறியுள்ள நிலையில் இன்று காலை சட்டசபைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குங்கள் என்ற பதாகைகளுடன் அவைக்கு வந்தனர்.

இதனால் ஆளும் சிவசேனா மற்றும் எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏ.க்களிடையே கடுமையான வாக்குவாதம் மூண்டது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையின் மையப்பகுதிக்கு சென்று கூச்சலிட்டனர்.

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கையில் வைத்திருந்த பதாகைகளை பாஜக எம்.எல்.ஏ.க்கள் பறிக்க முயன்றனர். இருதரப்பினருக்கிடையிலும் கைகலப்பு முற்றும் சூழல் ஏற்பட்டதால் சட்டசபையை அரைமணி நேரத்துக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் நானா பட்டோல் அறிவித்தார்.

அரைமணி நேரத்துக்கு பின்னரும் இதே நிலைமை நீடித்ததால் அவையில் நாளைவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
Tags:    

Similar News