செய்திகள்
சுக்பிர் சிங் பாதல்

சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

Published On 2019-12-14 10:46 GMT   |   Update On 2019-12-14 10:46 GMT
பஞ்சாப் முன்னாள் துணை முதல் மந்திரி சுக்பிர் சிங் பாதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவராக ஒன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சண்டிகர்:

அகாலி தளம் என அழைக்கப்படும் சிரோமணி அகாலி தளம் (Shiromani Akali Dal) பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓர் அரசியல் கட்சியாகும். இது சீக்கிய மதத்தையும் சீக்கியர்களின் நலனையும் முன்னெடுப்பதற்கென ஆரம்பிக்கப்பட்டது. 1920-ம் ஆண்டில் சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு ஆரம்பிக்கப்பட்ட பிறகு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக சர்முக் சிங் சப்பால் இருந்தார், மாஸ்டர் தாரா சிங் தலைமையேற்ற பின்பே இக்கட்சி பலம் மிக்கதாக மாறியது.

1947-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் இந்திய பகுதி பஞ்சாபானது, கிழக்கு பஞ்சாப் எனவும் பாகிஸ்தான் பகுதி பஞ்சாப், மேற்கு பஞ்சாப் எனவும் அழைக்கப்படலாயிற்று. சீக்கிய மதத்தவர்கள் பெருன்பான்மையாக கொண்ட மாநிலம் அமைப்பதற்காக இக்கட்சி போராடியது.

1966-ல் கிழக்கு பஞ்சாப், பஞ்சாப், அரியாணா, இமாச்சல பிரதேசம் என மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டது, இதில் பஞ்சாப் மாநிலம் சீக்கிய மதத்தை சார்ந்தவர்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தது.

கருத்து வேறுபாடுகள் காரணமாக இக்கட்சி பல குழுக்களாக சிதறியுள்ளது. ஒவ்வொரு குழுவும் தங்களையே உண்மையான அகாலி தளம் என கூறி வருகின்றன.



இந்நிலையில், பிரகாஷ் சிங் பாதல் மகனானபஞ்சாப் முன்னாள் துணை முதல் மந்திரி சுக்பிர் சிங் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் கட்சியின் 99-ம் ஆண்டு விழா இன்று அம்ரிஸ்டர் நகரில் கொண்டாடப்பட்டது.

அப்போது தலைவர் பதவிக்கு சுக்பிர் சிங் பாதல் பெயரை கட்சியின் மூத்த பிரமுகர்களில் ஒருவரான டோட்டா சிங் முன்மொழிந்தார், பிரேம் சிங் சன்டுமஜ்ரா வழிமொழிந்தார்.

அவருக்கு எதிராக போட்டியிட யாரும் முன்வராததால் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவராக சுக்பிர் சிங் பாதல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
Tags:    

Similar News