செய்திகள்
ராகுல் காந்தி

உண்மையை பேசுவதற்காக நான் ஒருநாளும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி

Published On 2019-12-14 09:14 GMT   |   Update On 2019-12-14 09:14 GMT
உண்மையை பேசுவதற்காக நான் ஒருநாளும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 புதுடெல்லி: 

நாட்டில் அதிகரித்து வரும் கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநில தேர்தல்  பிரசாரத்தின்போது நேற்று முன்தினம் தெரிவித்த ஒரு கருத்து ஆளும்கட்சி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பையும் கண்டத்தையும்  சந்திக்க நேர்ந்தது. 

இந்தியப் பெண்களை எல்லாம் இழிவுப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட மோசமான கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி இதற்காக  மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.   

இந்நிலையில், உண்மையை பேசுவதற்காக நான் ஒருநாளும் மன்னிப்பு கேட்கமாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார். 

விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு பிரச்சினை போன்றவற்றை கண்டித்து “இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற பெயரில் டெல்லி  ராம்லீலா திடலில் மிக பிரமாண்டமான எதிர்ப்பு பேரணியை காங்கிரஸ் கட்சி இன்று நடத்தியது. 

இந்த பேரணியில் பேசிய ராகுல் காந்தி, ‘எனது பெயர் ராகுல் காந்தி ராகுல் சாவர்க்கர் அல்ல. பொருளாதாரத்தை  அழித்துக்கொண்டிருக்கும் மோடி தன்னை தேசபக்தர் என கூறிக்கொள்கிறார்.  

இந்திய பொருளாதாரத்தை அழித்துக் கொண்டிருப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தான்  மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மையை பேசுவதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன். என்னைப்போலவே எந்த  காங்கிரஸ் கட்சியினரும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்’, என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News