செய்திகள்
உயிரிழந்த சிறுத்தை

மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை

Published On 2019-12-12 10:42 GMT   |   Update On 2019-12-12 10:42 GMT
கர்நாடகாவில் பம்பு செட்டிற்கு சென்ற தாழ்வான மின்கம்பிகளில் சிக்கி சிறுத்தைப்புலி ஒன்று பரிதாபமாக பலியானது.
மைசூர்:

யானை, சிறுத்தை, நரி போன்ற வனவிலங்குகளால் மனிதர்களுக்கு பாதிப்புகள் இருந்தாலும், அவ்விலங்குகள் மனிதர்களால்  உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. சாலை விபத்துகள், கிணறுகளில் விழுதல் போன்ற சம்பவங்களினால் வனவிலங்குகள் உயிரிழக்கின்றன.

அவ்வகையில், கர்நாடக மாநிலத்தில் பம்பு செட்டிற்கு தாழ்நிலையில் சென்ற மின்கம்பிகளில் சிக்கி சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது.

மைசூர் மாவட்டத்தின் கோட்டே தாலுகாவில் உள்ள ஜியாரா கிராமத்தில் தனியார் நிலப்பகுதிக்குள் நுழைய முயன்ற சிறுத்தை பம்பு செட்டிற்கு சென்ற தாழ்நிலை மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது. 

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலை அகற்றினர். தாழ் மட்டத்தில் மின்சார கம்பி பயன்படுத்தியதாக நில உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
Tags:    

Similar News