செய்திகள்
பிரதமர் மோடி

வாக்கு வங்கி அரசியலைப் பற்றி எப்போதும் கவலையில்லை -பிரதமர் மோடி

Published On 2019-12-12 08:34 GMT   |   Update On 2019-12-12 08:34 GMT
வாக்கு வங்கி அரசியலைப்பற்றி எனக்கு எப்போதும் கவலை கிடையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் ஒட்டுப்பதிவு முடிந்து விட்டது. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
 
கூட்டத்தில் பேசிய மோடி, ‘நாட்டு நலனுக்காக கடினமான சில முடிவுகளை எடுப்பதை காங்கிரஸ் கட்சி எப்போதும் தவிர்த்தது. ராம ஜென்மபூமி விவகாரத்தை பல ஆண்டுகளாக காங்கிரஸ் வேண்டுமென்றே நிலுவையில் வைத்திருந்தது. தேசிய நலனுக்கான விஷயங்கள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.

ஜார்க்கண்டின் உருவாக்கம் பற்றிய பிரச்சினையையும் அவர்கள் ஐம்பது ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தனர். அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் ஜார்க்கண்டை உருவாக்கியது. வாக்கு வங்கி அரசியலைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. எப்போதும் மக்கள் நலனுக்காக உழைப்பதில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளேன்’ என தெரிவித்தார். 
Tags:    

Similar News