செய்திகள்
ராகுல் காந்தி

குடியுரிமை மசோதா வடகிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல் -ராகுல்

Published On 2019-12-11 05:30 GMT   |   Update On 2019-12-11 05:30 GMT
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, வடகிழக்கு மாநிலங்கள் மீதான கிரிமினல் தாக்குதல் என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
புதுடெல்லி:

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

ஆனால் இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துவருகின்றனர். 

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவானது, வடகிழக்கு மாநிலங்கள் மீதும் அந்த மாநில மக்களின் வாழ்க்கை முறை மீதும் நடத்தப்படும் கிரிமினல் தாக்குதல் என கூறியுள்ளார். இந்த மசோதா விஷயத்தில் வடகிழக்கு மாநில மக்களுக்கு  துணை நிற்பதாகவும் ராகுல் கூறியுள்ளார். 
Tags:    

Similar News