செய்திகள்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே

பழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

Published On 2019-12-07 11:50 GMT   |   Update On 2019-12-07 11:50 GMT
பழிக்குப்பழி என்ற நிலைப்பாட்டுக்கு மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இன்று நடைபெற்ற புதுப்பிக்கப்பட்ட ஐகோர்ட் கட்டிடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழிப்பு வழக்கில் பிடிபட்ட குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலோட்டமாக சில கருத்துகளை தெரிவித்தார்.

நாட்டில் சமீபகாலமாக நடந்த சில சம்பவங்கள் பழைய விவாதத்துக்கு புதுத்தெம்பை ஊட்டியுள்ளது.கிரிமினல் வழக்குகளை முடித்து வைப்பதில் ஏற்படும் தொய்வு தொடர்பான மனப்பாங்கு மாற்றப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



ஆனால், நீதி என்பது எப்போதுமே உடனடியாக கிடைத்துவிடும் பொருளல்ல. அதேவேளையில், பழிவாங்கும் போக்கை நீதி எப்போதுமே கையில் எடுக்கக்கூடாது. அப்படி பழிக்குப்பழி என்ற நிலைப்பாட்டுக்கு மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும் என எஸ்.ஏ.பாப்டே குறிப்பிட்டார்.
Tags:    

Similar News