செய்திகள்
ஐதராபாத் போலீஸ்

என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு குஜராத் தொழில் அதிபர் ரூ.1 லட்சம் ரொக்க பரிசு

Published On 2019-12-06 22:32 GMT   |   Update On 2019-12-06 22:32 GMT
ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக குஜராத் தொழில் அதிபர் அறிவித்துள்ளார்.
காந்திநகர்:

ஐதராபாத்தில் பெண் கால்நடை டாக்டர் கற்பழித்து கொன்ற வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் என்கவுண்ட்டரில் கொன்றதை குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி, எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி ஆகியோர் பாராட்டினர். மேலும், பாவ் நகர் மாவட்டம், மகுவா நகரை சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக அறிவித்தார்.

இதையொட்டி அவர் வெளியிட்ட வீடியோ செய்தியில், “நமது நாட்டின் போலீசாரை எண்ணி பெருமை அடைகிறேன். இந்த நாட்டின் பெண் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் ஐதராபாத் போலீசார் மதிப்பு கொடுத்து இருக்கிறார்கள். நான் ஐதராபாத்துக்கு நேரில் சென்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை போலீசாருக்கு வழங்குவேன்” என கூறி உள்ளார்.
Tags:    

Similar News