செய்திகள்
போலி புகார் அளித்த இளம்பெண் மற்றும் அவரது காதலன்

காதலனுக்கு எதிராக சாட்சியா? - கற்பழிப்பு புகார் கொடுத்து மாட்டிக் கொண்ட காதலி

Published On 2019-12-06 16:49 GMT   |   Update On 2019-12-06 16:49 GMT
உத்தர பிரதேசத்தில் காதலனுக்கு எதிராக சாட்சி அளித்தவர்கள் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்த 20 வயது நிரம்பிய ஒரு இளம்பெண் கடந்த புதன்கிழமை போலீசில் ஒரு புகார் அளித்தார். 

அதில், தான் ஹரி பர்வட் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் இருந்து வந்து கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த மூன்று நபர்கள் உங்கள் சகோதரனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. நீங்கள் உடனடியாக வாருங்கள் என கூறி தன்னை காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். 

பின்னர் தன்னை காரில் வைத்து பலாத்காரம் செய்துவிட்டு கலிப் என்ற கிராமத்தின் காரில் இருந்து வீசி விட்டு சென்றதாக புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெண் புகார் கொடுத்த மூன்று பேரையும் கைது செய்தனர். 

இதையடுத்து தன்னை கற்பழித்த நபர்கள் இவர்கள் தானா என்பதை அடையாளம் காட்டவும், விசாரணைக்காகவும் புகார் அளித்த பெண்ணை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்தனர். அங்கு வந்த இளம்பெண் போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். 

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் புகார் அளித்த இளம்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் தான் போலியாக கற்பழிப்பு புகார் அளித்ததை இளம்பெண் ஒப்புக்கொண்டார். 

மேலும், போலி கற்பழிப்பு புகார் அளித்ததற்கான காரணமாக அவர் தெரிவித்ததாவது:-

’கொலை வழக்கில் தொடர்புடைய தனது காதலனுக்கு எதிராக இந்த மூன்று பேரும் சாட்சியளித்தவர்கள். ஆகவே அவர்களை போலீசில் சிக்க வைத்து கொலைவழக்கு தொடர்பான விசாரணையில் இருந்து திசை திருப்ப எனது காதலன் எண்ணினான். 

இதற்காக இந்த மூன்று பேர் மீதும் தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் கொடுக்க எனது காதலன் வற்புறுத்தினார். அவனின் வற்புறுத்தலை ஏற்று இந்த நபர்கள் மீது போலியாக கற்பழிப்பு புகார் அளித்தேன்’ என அந்த இளம் பெண் தெரிவித்தார்.

இதையடுத்து, போலியாக கற்பழிப்பு புகார் அளித்த இளம்பெண், அவரது காதலன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த நபர் என மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags:    

Similar News