செய்திகள்
ஹெல்மெட்

குஜராத் நகரங்களில் இருசக்கர ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணியத் தேவையில்லை

Published On 2019-12-05 19:41 GMT   |   Update On 2019-12-05 19:41 GMT
குஜராத் மாநிலத்தில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்று மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது.
ஆமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்று மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது. காந்திநகரில் நேற்று முதல்-மந்திரி விஜய் ரூபானி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுபற்றி போக்குவரத்துத்துறை மந்திரி ஆர்.சி.பால்டு கூறும்போது, “நகராட்சி மற்றும் மாநகராட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டாம். ஆனால் நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புறங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வாங்கச் செல்லும்போது ஹெல்மெட்டை கையோடு கொண்டு செல்வது சிரமமாக இருக்கிறது என்று பொதுமக்கள் கூறினர். மேலும் சில சிரமங்கள் இருப்பதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.
Tags:    

Similar News