உத்தரபிரதேசத்தில் ரூ.100 லஞ்சம் கேட்ட தபால்துறை ஊழியர்கள் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
100 ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கை விசாரிக்கும் சிபிஐ
பதிவு: டிசம்பர் 02, 2019 16:17
சிபிஐ
புதுடெல்லி:
பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரித்து வரும், நாட்டின் மிகப்பெரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ, இப்போது வெறும் 100 ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கையும் விசாரணைக்கு எடுத்திருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கமிஷன் ஏஜெண்ட் ஒருவரிடம் ரூ.100 லஞ்சம் கேட்ட இரு அரசு ஊழியர்கள் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள தபால் அலுவலகத்தின் இரு ஊழியர்கள் கமிஷன் ஏஜெண்ட் ஒருவரிடம் ரூ.100 லஞ்சம் கேட்டுள்ளனர். ஒவ்வொரு 20 ஆயிரம் ரூபாய் டெபாசிட்டுக்கும் 100 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த ஏஜெண்டின் கணவர் அளித்த புகாரின் பேரில் அந்த தபால் அலுவலக கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் உதவியாளர் சுராஜ் ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
‘சிறிய வழக்காக இருந்தாலும் பெரிய வழக்காக இருந்தாலும், அனைத்து வழக்குகளிலும் சிபிஐ முறையான விசாரணை மேற்கொள்ளும்’ என சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :