இந்தியா

திருமண மண்டபத்துக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்த மணப்பெண்

Published On 2024-05-17 12:31 IST   |   Update On 2024-05-17 12:31:00 IST
  • திருமண மண்டபத்தின் வாசலில் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மணமகளின் வருகையை எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர்.
  • வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆடம்பர திருமணங்கள் நடைபெறும் போது மணமக்களை விலை உயர்ந்த வாகனங்கள் அல்லது பாரம்பரிய முறைப்படி அழைத்து வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபகாலமாக மணமக்கள் வித்தியாசமான முறையில் ஊர்வலமாக அழைத்து வரப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் மணப்பெண் ஒருவர் திருமண மண்டபத்துக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து இறங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், திருமண மண்டபத்தின் வாசலில் மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மணமகளின் வருகையை எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர். அப்போது மணமகள் தன்னந்தனியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து இறங்குகிறார். அவரை ஆரவாரத்துடன் வரவேற்கும் காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News