செய்திகள்
நிதின் கட்காரி

நான் அப்பவே சொன்னேன்ல... நிதின் கட்காரி அதிரடி

Published On 2019-11-23 13:10 GMT   |   Update On 2019-11-23 13:10 GMT
அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என நான் அப்பவே சொன்னேன் அல்லவா... ? என மத்திய மந்திரி நிதின் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக நேற்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த கூட்டணி தொடர்பாக பாஜக கட்சியின் மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சித்தாந்த ரீதியில் வேறுபட்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து அமைத்து அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. 

இந்த கட்சிகள் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்குமா? என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. ஏனென்றால், கிரிக்கெட்டை போன்று அரசியலிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என தெரிவித்திருந்தார்.

நிதின் கட்காரியின் கருத்துக்கு ஏற்றார்போல் யாரும் எதிர்பாராத விதமாக இன்று காலை பாஜகவுடன் கைகோர்ந்த்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் மகாராஷ்டிராவில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றனர்.



பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இதற்கிடையில், காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக நேற்று தான் பேச்சுவார்த்தை நடத்தியது.  ஆனால் ஒரே இரவில் நிலைமை தலைகீழாக மாறி ஆட்சி பாஜக வசம் வந்தது. 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்று மீண்டும் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிதின் கட்காரி, 'கிரிக்கெட்டிலும், அரசியலிலும் என்ன வேண்டுமானாலும் நிகழால் என நான் அப்பவே கூறினேன் அல்லவா...? நான் கூறியதன் அர்த்தத்தை நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள்’ என தெரிவித்தார். 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள அஜித் பவாரின் முடிவு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என்றும், அவரது முடிவை ஆதரிக்கவில்லை என்றும் கட்சி தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். இதனால் அக்கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. 
Tags:    

Similar News