செய்திகள்
ஆதரவாளர்களுடன் ஜன்நாயக் ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா

அரியானா சட்டமன்ற தேர்தல்- இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜன்நாயக் ஜனதா கட்சி

Published On 2019-09-30 03:31 GMT   |   Update On 2019-09-30 03:31 GMT
அரியானா சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக களமிறங்கி உள்ள ஜன்நாயக் ஜனதா கட்சி இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
சண்டிகர்:

90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட அரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.

அவ்வகையில் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜன்நாயக் ஜனதா கட்சி 2-வது பட்டியலை வெளியிட்டுள்ளது.

கல்கா, சதாவுரா, ரடார், பெகோவா, பண்டாரி, நிலோகேல், இந்திரி, கோகனா, சிர்சா, பகதூர்கர், பாட்லி, பெரி, நங்கால் சவுதாரி, நூஹ், பரிதாபாத் ஆகிய 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ரடார் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மங்கே ராம் போட்டியிடுகிறார். முக்கிய தலைவரான சஞ்சய் தலால், பகதூர்கர் தொகுதியிலும், முன்னாள் எம்எல்ஏ மூலா ராம் நங்கால் சவுதாரி தொகுதியிலும் களமிறங்குகின்றனர்.

இந்திய தேசிய லோக் தளம் கட்சியில், சவுதாலா குடும்பத்திற்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, அந்த கட்சி கடந்த ஆண்டு உடைந்தது. அஜய் சிங் சவுதாலாவும் துஷ்யந்த் சவுதாலாவும் இணைந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜன்நாயக் ஜனதா கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News