செய்திகள்
மீட்புப்பணிகளில் ஈடுபட்ட காட்சி

மகாராஷ்டிராவில் கனமழை - புனே மாவட்டத்தில் 12 பேர் பலி

Published On 2019-09-26 07:47 GMT   |   Update On 2019-09-26 07:47 GMT
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில் மழை வெள்ளம் தொடர்பான விபத்துக்களில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
புனே:

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகரத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புனே மாவட்டத்தில் மழை வெள்ளம் மற்றும் சுவர் இடிந்து விழுந்த விபத்து சம்பவங்கள் காரணமாக 9 வயது சிறுவன் உள்பட இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்போர் உள்பட மொத்தம்  10500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தனர். 

மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன, மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் களத்தில் உள்ளனர் என்றும் அவர் டுவீட் செய்துள்ளார்.

இன்று காலை மழை நின்றுவிட்டது, ஆனால் பல வீடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News