செய்திகள்
சாமியார் சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி

சாமியார் சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறிய மாணவி 14 நாள் சிறையில் அடைப்பு

Published On 2019-09-25 08:36 GMT   |   Update On 2019-09-25 10:35 GMT
சாமியார் சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவியை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஷாஜகான்பூர்:

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா தலைவர் சுவாமி சின்மயானந்தா. முன்னாள் மத்திய மந்திரியான இவர் மீது ஷாஜன்பூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் கூறினார்.

சின்மயானந்தா கல்லூரியில் படித்த தன்னை சாமியார் தவறாக வீடியோ எடுத்து கடந்த 1 ஆண்டாக மிரட்டி கற்பழித்ததாக அந்த மாணவி குற்றம்சாட்டி இருந்தார்.

மாணவியும், அவரது தந்தையும் கொடுத்த வீடியோ அடிப்படையில் சாமியார் சின்மயானந்தாவை சிறப்பு பாதுகாப்பு குழுவினர் கைது செய்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



இதற்கிடையே சின்மயானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டை கூறிய சட்டக்கல்லூரி மாணவி மீது பணப்பறிப்பு புகார் கூறப்பட்டுள்ளது.

சின்மயானந்தா மீதான பாலியல் புகார் ஆதாரங்களை அழிப்பதற்காக ரூ.5 கோடி கேட்டு அந்த பெண் மிரட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மாணவி ஷாஜன்பூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில் சாமியார் மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி இன்று காலை 9.15 மணி அளவில் பணப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறப்பு புலனாய்வு குழு அவரை கைது செய்தது. பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஷாஜகான்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் வினித்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவியை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

சின்மயானந்தா மீது புகார் கூறிய மாணவியை போலீசார் பலவந்ததாக இழுத்து சென்றதாகவும், செருப்பு கூட அணிய அனுமதிக்கவில்லை. மாணவியை கைது செய்யும்போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
Tags:    

Similar News