செய்திகள்
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், கைபேசிகள், ரொக்கப் பணம்

பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மறைவிடம் சுற்றிவளைப்பு - ஆயுதங்கள் பறிமுதல்

Published On 2019-09-22 15:19 GMT   |   Update On 2019-09-22 15:19 GMT
பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக மாற்ற விரும்பும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை சுற்றிவளைத்த போலீசார் இயந்திர துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் முன்னர் ஆயுதமேந்திய போராட்டங்களில் ஈடுபட்டன. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்த அமைப்புகளை எல்லாம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார்.

உச்சக்கட்ட நடவடிக்கையாக, அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கிய பொற்கோயிலுக்குள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த பிரிவினைவாதிகளை எல்லாம் ராணுவத்தை அனுப்பி தீர்த்துக் கட்டினார்.

இதற்கு பழிவாங்கும் விதமாகத்தான் இந்திரா காந்தியின் மெய்க்காப்பாளர்களாக இருந்த இரு சீக்கியர்கள் அவரை துடிதுடிக்க சுட்டுக் கொன்றனர். இந்திராவின் மறைவுக்கு பின்னரும் பஞ்சாப்
பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.



இருப்பினும், முன்னர் காலிஸ்தான் ஜிந்தாபாத் இயக்கம் என்ற பெயருடன் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் மற்றும் ஜெர்மனி நாட்டில் இயங்கிவரும் சில பயங்கரவாத குழுக்களின் நிதியுதவி மற்றும் ஆதரவுடன் சமீபகாலமாக மெல்ல தலைதூக்க தொடங்கியது.

இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சமீபத்தில் சுற்றிவளைத்த போலீசார் ஏகே-47 ரக இயந்திர துப்பாக்கிகள், செயற்கைக்கோள் கைபேசிகள், கையெறி குண்டுகள், கட்டுக்கட்டாக பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் இவ்வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் முதல் மந்திரியின் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News