செய்திகள்
மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட காட்சி

மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கு: 29 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிக்கு விடுதலை

Published On 2019-09-13 04:20 GMT   |   Update On 2019-09-13 04:22 GMT
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளி லாலு ஆலம் 29 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கடந்த 1990ம் ஆண்டு மேற்கு வங்க காங்கிரஸ் இளைஞரணி தலைவராக இருந்தார். அப்போது பேரணி ஒன்றை தலைமை ஏற்று அவரது வீட்டில் இருந்து தொடங்கினார்.

இந்த பேரணியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த லாலு மற்றும் சிலரால் மம்தா பலமாக தாக்கப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. இந்த விவகாரத்தில் குற்றவாளியான லாலு ஆலம் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 12 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.



இது அந்நாளில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் 29 ஆண்டு சிறை தண்டனைக்கு பின்னர் போதுமான சாட்சியம் இல்லை என அவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் ராதாகாந்த முகர்ஜி கூறுகையில், ‘இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்த சிலர் இறந்து விட்டனர். இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர். சரியான சாட்சிகளும் இல்லை.

இதுபோன்ற நிலையில், வழக்கை மேலும் தொடர்ந்தால் பணமும், நேரமும் வீணாகும். இதனை தவிர்க்கும் நோக்கத்தினுடனே இந்த வழக்கை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.

Tags:    

Similar News