செய்திகள்
பிரதமர் மோடி

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு விடை கொடுப்போம் -பிரதமர் மோடி

Published On 2019-09-11 10:49 GMT   |   Update On 2019-09-11 11:21 GMT
உத்தரபிரதேசத்தில் கால்நடைகளுக்கான நோய் தடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மதுரா:

கால்நடைகளின் கால் மற்றும் வாய் நோய் (எப்எம்டி), புருசெல்லோசிஸை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தினை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பின்னர் அப்பகுதியில் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த இடத்தில், மோடி குப்பைகளில் இருந்து  நெகிழிப் பைகளை எடுத்துக் கொண்டிருந்த நெகிழிப் பொருட்கள் சேகரிப்பு பெண்களை சந்தித்து பேசி,  அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார். இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அக்டோபர் 2-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நடவடிக்கையில் அனைவரும் ஈடுபட வேண்டும். மகாத்மா காந்தி பிறந்த தினமான அன்று முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக நாம் தடை செய்வோம்.



வீடு, அலுவலகம், பணிபுரியும் இடம் என அனைத்துப் பகுதிகளிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு விடை கொடுப்போம். சுய உதவிக்குழு, சமூக அமைப்புகள், தனிநபர் என பல்வேறு தரப்பினரும் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக விடை கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News