செய்திகள்
ராஜஸ்தான் மாநில ஆளுநராக பதவியேற்ற கல்ராஜ் மிஸ்ரா

ராஜஸ்தான் மாநில ஆளுநராக பதவியேற்றார் கல்ராஜ் மிஸ்ரா

Published On 2019-09-09 09:02 GMT   |   Update On 2019-09-09 09:02 GMT
ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட கல்ராஜ் மிஸ்ரா இன்று பதவியேற்றுக்கொண்டார்.
ஜெய்ப்பூர்:

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் கல்யாண் சிங்கின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, முன்னாள் மத்திய மந்திரியும், இமாச்சல பிரதேச ஆளுநருமான கல்ராஜ் மிஸ்ரா (வயது 78), ஜார்க்கண்ட் மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஜெய்ப்பூர் சென்ற கல்ராஜ் மிஸ்ரா இன்று ஆளுநராக பதவியேற்றார்.



ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கல்ராஜ் மிஸ்ராவுக்கு மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திர பட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, புதிய கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

விழாவில் மாநில முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சிக் பைலட், எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News