செய்திகள்
பிரதமர் மோடி

பலத்த மழை எச்சரிக்கை எதிரொலி - பிரதமர் மோடியின் நாக்பூர் பயணம் ரத்து

Published On 2019-09-07 04:22 GMT   |   Update On 2019-09-07 04:22 GMT
நாக்பூரில் இன்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, பிரதமர் மோடியின் நாக்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாக்பூர்:

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர், மும்பை மற்றும் அவுரங்காபாத்தில் பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக பெங்களூருவில் இருந்து இன்று காலையில் விமானத்தில் புறப்பட்ட மோடி மும்பை செல்கிறார். மும்பையில் புதிய மெட்ரோ ரெயில் வழித்தட பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் மோடி, அங்கிருந்து மதியம் 1.35 மணியளவில் விமானத்தில் அவுரங்காபாத் செல்கிறார். அவுரங்காபாத் தொழில் நகரத்தில் நவீனமயமாக்கப்பட்ட அரங்கை திறந்து வைக்க உள்ளார். பின்னர், மாநில அளவிலான மகளிர் சுய உதவிக்குழு கூட்டத்தில் உரையாற்றுகிறார்.



இந்நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நாக்பூர் வருகை தரும் மோடி, மெட்ரோ ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாக்பூர் அக்வா லைன் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை மோடி தொடங்கி வைக்கவிருந்தார். வேறு சில நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பதாக இருந்தது.

ஆனால், இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. எனவே, பிரதமரின் நாக்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News