செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டலுக்கு இதுவா காரணம்? -குற்றவாளியின் வாக்குமூலம் கேட்டு திகைத்த அதிகாரிகள்

Published On 2019-09-05 09:51 GMT   |   Update On 2019-09-05 10:22 GMT
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அளித்த வாக்குமூலத்தினை கேட்டு அதிகாரிகள் திகைத்தனர். அது என்ன என்பதை பார்ப்போம்.
ஐதராபாத்:

ஐதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் போன் நம்பர் ஆகியவற்றை வைத்து அந்த நபரை தேடினர். அது சாய்ராம் என்பவருடையது.

அதே சமயம், விமான நிலையத்தில் தீவிர சோதனையும் நடத்தப்பட்டது. மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் நம்பரை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் பின்னர் சசிகாந்த் என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரிக்கும்போது அவர் கூறிய காரணம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கூறுகையில், ‘நான் வேலை இல்லாமல் இருக்கிறேன். ஆனால், என் நண்பனான சாய்ராம் மேற்கொண்டு படிக்க கனடா செல்ல ரெடி ஆயிட்டான். அவன் செவ்வாய்க்கிழமை கனடா செல்ல இருந்தான்.



அதனால்தான் விமான நிலையத்தை தகர்க்கப்போவதாக தெரிவித்தேன். இதற்கு முன்பாக சாய்ராம் குறித்து தவறான தகவல்களை தூதரகத்துக்கு அனுப்பியுள்ளேன்’ என சசிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் சசியை கைது செய்தனர்.  காவல் நிலையத்திற்கு சசியை காண வந்த சாய்ராம், அவருக்கு ரூ.500 கொடுத்துவிட்டு கனடாவிற்கு மேல்படிப்புக்காக புறப்பட்டார்.

Tags:    

Similar News