செய்திகள்
கோப்பு படம்

போட்டி தேர்வுகளில் மூழ்கிய கணவர் - தாய் வீடு திரும்பிய புது மணப்பெண்

Published On 2019-08-31 12:16 GMT   |   Update On 2019-08-31 12:23 GMT
போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என படிப்பில் மூழ்கிய கணவரால் புது மணப்பெண் தனது தாய் வீட்டிற்கே திரும்பிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்:

மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு ஊழியராக வேண்டும் என்பது பெரும்பாலானோர்களின் கனவாக உள்ளது. இதற்காக பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து இரவு பகல் பாராமல் எப்படியாவது அரசு பணியில் சேர்ந்து விட வேண்டும் என எண்ணி தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் சிலர் தங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது. குறிப்பாக, திருமணமானவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வ மிகுதியில் தங்களது வாழ்க்கையையே இழந்து விடுகின்றனர். இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தில் பி.ஹெச்டி பட்டம் பெற்ற நபர் ஒருவர் தான் எப்படியாவது அரசு பணியில் சேர வேண்டும் என எண்ணி அதற்காக போட்டி தேர்வு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து திவீர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவரது பெற்றோர் தங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி விரைவாக அவரை ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தனர்.



திருமணம் செய்த பிறகும் புது மணப்பெண்ணான தனது மனைவியை புறக்கணித்த அந்த வாலிபர், இல்லற வாழ்வில் ஈடுபடாமல் தொடர்ந்து போட்டி தேர்வுக்கான படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். மனைவியிடம் அவர் நடந்து கொண்ட விதமும் வித்தியாசமாக இருந்ததால் கடுமையான மன உழைச்சலுக்குள்ளான அந்த புதுமணப்பெண் புகுந்த வீட்டை துறந்து, தனது பிறந்த வீட்டிற்கே சென்றுவிட்டார். 

தனது மனைவி நீண்ட நாள் ஆகியும் தனது வீட்டுக்கு திரும்பி வராததை உணர்ந்த கணவன், மனைவியை விவாகரத்து செய்வதற்காக நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த விவகாரத்தில் இவர்களுகுகு தகுந்த ஆலேசானை வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
Tags:    

Similar News