செய்திகள்
வருமான வரித்துறை

சென்னை அதிகாரி உள்பட 22 வருமானவரி அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு - மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

Published On 2019-08-26 22:40 GMT   |   Update On 2019-08-26 22:40 GMT
வருமான வரித்துறையில் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் உள்ள சென்னை அதிகாரி உள்பட 22 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், ‘நேர்மையாக வருமான வரி செலுத்துவோரை சில கருப்பு ஆடுகள் போன்ற சில அதிகாரிகள் தங்கள் அதிகாரம் மூலமாக தவறாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தவறு செய்த அதிகாரிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து சமீபகாலமாக அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக கடந்த ஜூன் மாதம் 27 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு கட்டாய ஓய்வில் அனுப்பியது. இந்த நிலையில் தற்போது வருமான வரித்துறையில் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கிய சூப்பிரண்டு அந்தஸ்தில் உள்ள சென்னை அதிகாரி உள்பட மேலும் 22 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதில் மும்பை, பெங்களூரு உள்பட 12 மண்டலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
Tags:    

Similar News