செய்திகள்
சிறப்பு பாதுகாப்புடன் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்கின் சிறப்பு பாதுகாப்பை திரும்ப பெற்றது மத்திய அரசு

Published On 2019-08-26 06:05 GMT   |   Update On 2019-08-26 06:05 GMT
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.
புதுடெல்லி:

நாட்டின் பிரதமர், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. மிரட்டல், அச்சுறுத்தல்களை கணித்து, இந்த பாதுகாப்பு வழங்கப்படுவது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் மறுபரிசீலனை செய்யப்படுகிறது.  

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை (எஸ்பிஜி) மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. அதற்கு பதிலாக இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவுக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என காங்கிரஸ் தலைவர்கள் கூறி உள்ளனர்.

இந்திராகாந்தி கொல்லப்பட்ட பிறகு பிரதமர்களின் பாதுகாப்பு கருதி, 1985ம் ஆண்டு இந்த சிறப்பு பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் முன்னாள் பிரதமர்களுக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News